search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவராஜ் சிங் சவுகான்"

    • பாராளுமன்ற தேர்தலுக்கான 195 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.
    • ம.பி.யின் விதிஷா தொகுதியில் முன்னாள் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் போட்டியிடுகிறார்.

    போபால்:

    பாராளுமன்ற தேர்தலுக்கான 195 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது. இதில் மத்திய பிரதேச மாநிலத்துக்கு 24 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    முன்னாள் முதல் மந்திரியான சிவராஜ் சிங் சவுகான், விதிஷா தொகுதியில் போட்டியிடு கிறார். அவர் ஏற்கனவே இந்த தொகுதியில் இருந்து 4 முறை எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார். தற்போது 5-வது முறையாக அந்த தொகுதியில் நிற்கிறார்.

    கடந்த 1996-ல் இந்த தொகுதியில் இருந்து தான் வாஜ்பாய் வெற்றிபெற்றார். இதேபோல், சுஷ்மா சுவராஜ் 2009 மற்றும் 2014-ல் இங்கு இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 29 தொகுகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சவுகான் கூறுகையில், மத்திய பிரதேச மக்களின் நெஞ்சில் பிரதமர் மோடி இருக்கிறார். இதனால் பா.ஜ.க. 29 தொகுதிகளிலும் வெற்றி பெறும். நாடு முழுவதும் 400 தொகுதிகளில் வெற்றிபெறுவதை இலக்காகக் கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.

    • நான் முதல்வர் பதவியில் இருந்து விலகியதால், தீவிர அரசியல் செயல்பாட்டில் இருந்து விலகுகிறேன் என்ற அர்த்தம் கிடையாது.
    • நான் எந்தவிதமான பதவிக்காகவும் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்துள்ளேன்.

    மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனால் சிவராஜ் சிங் சவுகான்தான் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதுமுகமான மோகன் யாதவ் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

    சிவராஜ் சிங் சவுகானுக்கு மத்திய பிரதேச மக்களிடம் நல்ல செல்வாக்கு உள்ளது. பெண்கள் அவரை "மாமா" என செல்லப் பெயருடன் அழைப்பாளர்கள். அவர் மீண்டும் முதல்வராக பதவி ஏற்காமல் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தார். அப்போது பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அவர்களை சிவராஜ் சிங் ஆறுதல் படுத்தினர்.

    முதல்வராக இல்லாத அவரின் எதிர்காலம் என்ன? கட்சி அவரை எப்படி பார்க்கும்? என்ற கேள்விகள் எழுந்தன.

    இந்த நிலையில் ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்டார். அப்போது சிவராஜ் சிங் சவுகான் பேசியதாகவது:-

    தற்போது நான் முன்னாள் முதல்வர் என்று அழைக்கப்படுகிறேன். ஆனால் நான் நிராகரிக்கப்பட்ட முதல்வர் அல்ல. நீண்ட காலமாக முதல்வராக இருக்கும் நிலையில் மக்கள் எதிர்ப்பு காரணமாக முதல் மந்திரிகள் ராஜினாமா செய்யும் சம்பவம் பலமுறை நடந்துள்ளது.

    ஆனால் நான் எங்கே சென்றாலும் மக்கள் என்னை மாமா என செல்லமாக அழைக்கின்றனர். மக்கள் எனக்காக குரல் கொடுக்கும்போது, நான் முதல் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.

    நான் முதல்வர் பதவியில் இருந்து விலகியதால், தீவிர அரசியல் செயல்பாட்டில் இருந்து விலகுகிறேன் என்ற அர்த்தம் கிடையாது. நான் எந்தவிதமான பதவிக்காகவும் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்துள்ளேன்.

    இவ்வாறு சிவராஜ் சிங் சவுதான் தெரிவித்துள்ளார். சிவராஜ் சிங் சவுகான் நான்கு முறை முதல் மந்திரியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.
    • கடந்த முறை நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது.

    போபால்:

    இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் ஆணி வேராக இருப்பது தொண்டர்களே. தங்கள் தலைவர்களுக்காக தயக்கம் இன்றி களத்தில் இறங்கி செயலாற்றுவது வழக்கம். தங்களின் தலைவர்கள் வெற்றிபெற வேண்டி தொண்டர்கள் பல வினோதமான செயல்களை செய்வார்கள்.

    பா.ஜ.க.வைச் சேர்ந்த ராம்தாஸ் புரி என்பவர், கடந்த 6 ஆண்டாக செருப்பு அணியாமல் நடப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியில் அமரும் வரை கால்களில் செருப்பு மற்றும் ஷூ அணிய மாட்டேன். கடந்த 2018-ல் நான் எனது செருப்புகளை கழற்றிய நான், கடந்த 6 ஆண்டாக செருப்பு அணியாமல் இருந்துவருகிறேன். மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்தால் தான் மீண்டும் அதனை அணிந்துகொள்வேன் என தெரிவித்தார்.

    இதற்கிடையே, சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியான சிவராஜ் சிங் சவுகான் இன்று ம.பி.யின் அனுப்பூர் பகுதிக்குச் சென்றார். அங்கு மாவட்ட தலைவராக இருக்கும் ராம்தாஸ் புரியைச் சந்தித்து புதிய ஷூக்களைக் கொடுத்தார்.

    பா.ஜ.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, ராம்தாஸ் புரி அந்த ஷூக்களை மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டார்.

    கடந்த முறை நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது குறிப்பிடத்தக்கது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. 163 இடங்களில் வெற்றி பெற்றது.
    • மோகன் யாதவ் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்து வரும் பா.ஜனதா இந்த தடவை அதிக இடங்களை கைப்பற்றி இருக்கிறது.

    அங்கு மோகன் யாதவ் புதிய முதல் மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். ராஜேந்திர சுக்லா, ஜெகதீஷ் தேவ்தா இருவரும் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றனர்.

    இந்நிலையில், விதிஷா தொகுதியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல் மந்திரியுமான சிவராஜ் சிங் சவுகான் அங்கு நடந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அங்கிருந்த பெண் தொண்டர்கள் பலர் முதல் மந்திரி பதவி மாற்றப்பட்டதால் வருந்தி கண்ணீர் விட்டுக் கதறினர். அப்போது பேசிய சிவராஜ் சிங் சவுகான், நாங் இங்கிருந்து எங்கும் போகமாட்டேன், உங்களோடு தான் இருப்பேன் என அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த முறை 109 தொகுதிகளை பிடித்திருந்தது.
    • தற்போது 150 இடங்களை தாண்டி பிடிக்கும் நிலையில் உள்ளது.

    230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியை பிடித்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஜோதிராதித்யா சிந்தியா 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களுடன் பா.ஜனதாவில் இணைந்தார். இதனால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.

    தற்போது எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கடும் தேர்தல் பிரசாரம் செய்தது. இருந்தபோதிலும், தேர்தல் முடிவில் அந்த கட்சிக்கு பின்னடைவுதான் ஏற்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பா.ஜனதா முன்னிலை வகித்தது. நேரம் ஆகஆக பா.ஜனதாவின் முன்னிலை அமோகமாக இருந்தது.

    11 மணி நிலவரப்படி 155 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலை விட 46 இடங்கள் அதிகமாக பெறும் நிலையில் உள்ளது. இதனால் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராவது உறுதியாகிவிட்டது.

    • மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பெரிய நடிகர். அவர் அமிதாப்பை மிஞ்சி விடுவார்- பிரியங்கா
    • பிரியங்கா காந்தி தேர்தலை பெரிதாக கொள்ளவில்லை. தேர்தல், மக்கள், ஜனநாயகத்தை பொழுதுபோக்கு போன்று கருதுகிறார்- சவுகான்

    மத்திய பிரதேச மாநிலத்தில் 230 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    பா.ஜனதா- காங்கிரஸ் கட்சி தலைவர்கள் போட்டி பிரசாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரத்தின்போது, "மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பெரிய நடிகர். அவர் அமிதாப்பை மிஞ்சி விடுவார். பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்கள் அவதூறாக பேசுவதாக அழுது கொண்டிருக்கிறார். அவரை வைத்து மேரே நாம் படத்தை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் சிவராஜ் சவுகான், பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில் "பிரியங்கா காந்தி தேர்தலை பெரிதாக கொள்ளவில்லை. தேர்தல், மக்கள், ஜனநாயகத்தை பொழுதுபோக்கு போன்று கருதுகிறார். அதனால்தான் பொழுதுபோக்கிற்காக இங்கு வந்தார். இது அவளுடைய மோசமான சிந்தனையின் பிரதிபலிப்பு.

    மாநிலத்தில் உள்ள தீவிர பிரச்சினைகள் குறித்து பேசுங்கள். முதல்வர் படத்தில் நடிப்பது குறித்த விவகாரத்தை வைத்து தேர்தலில் போட்டியிட முடியுமா?. நடிப்பது, மோடியை வைத்து படம் எடுக்கலாம் குறித்து பேசுவது அரசியல் பிரச்சினையா? என்று அவரிடம் கேட்க விரும்புகிறேன். அவர் தேர்தலை கேலி செய்கிறார். இது ஜனநாயகத்திற்கும், மக்களுக்கும் அவமரியாதை'' என்றார்.

    • பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜக. தலைவர்களை பிரியங்கா காந்தி நடிகர்களுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
    • இதையடுத்து, மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பிரியங்காவிற்கு கண்டனம் தெரிவித்தார்.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சியினர் அவதூறு பேசுவதாக நீலிக்கண்ணீர் வடித்த பிரதமர் மோடி, மத்தியப் பிரதேச தேர்தல் பிரசாரத்தின்போதும் அதையே குறிப்பிட்டு பேசினார்.

    சல்மான்கான் நடித்த மேரா நாம் படத்தின் கதாபாத்திரத்தை கூறி அழுதார். மேரா நாம் என்ற படத்தின் பெயர், கதை மோடியை வைத்தே எடுக்கப்பட்டதோ என்று தோன்றுகிறது.

    முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானும் ஒரு சிறந்த நடிகர். நடிப்பில் அவர் அமிதாப் பச்சனையே மிஞ்சிவிடுவார். அவர் செய்யும் வேலைகள் நகைப்புக்குரியதாக இருக்கும்.

    மாநில உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ராவுக்கு சட்டம்-ஒழுங்கைப் பற்றி கவலை இல்லை. எந்தப் படத்தில், எந்த ஹீரோயின் என்ன உடை அணிந்து வந்தார் என்பதுதான் அவரது கவலை என காட்டமாக பேசியிருந்தார்.

    அதாவது பதான் படத்தில் தீபிகா படுகோனே காவிநிற உடை உடுத்தி வந்ததை கடுமையாக மிஸ்ரா விமர்சித்திருந்ததை குறிப்பிட்டு பிரியங்கா பேசியிருந்தார்.

    இந்நிலையில், முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், பிரியங்கா இவ்வளவு கீழ்த்தரமாக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மக்களின் பிரச்சினைகள், வளர்ச்சி பணிகளை பற்றி பேசவேண்டும். தேர்தலில் காங்கிரஸ் தீவிரம் காட்டவில்லை என்பதையே இது காட்டுகிறது என கண்டனம் தெரிவித்தார்.

    • பரிசோதனைக்காக கூட வாய்ப்பு கொடுக்காதவர்
    • பேட்டை எடுத்தால் ஹிட்அவுட் ஆவார்

    மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. பா.ஜனதா சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்றாலும், சிவராஜ் சிங் சவுகானுக்குத்தான் அதிக வாய்ப்புள்ளது.

    தேதி அறிவிக்கப்படாத நிலையிலும், பா.ஜனதா தலைவர்கள் மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

    மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், சிவராஜ் சிங் சவுகானின் தலைமையை (Leader) வெகுவாக பாராட்டினார். அத்துடன் டோனியுடன் ஒப்பிட்டார். டோனி இந்தியாவை வெற்றிகரமாக வழி நடத்தி 2011 உலகக்கோப்பையை வென்றார். அதேபோல் சிவராஜ் சிங் சவுகான் வரவிருக்கும் தேர்தலில் வெற்றி வாகை சூடுவார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு காங்கிரஸ் கட்சியின் சுர்ஜேவாலா, டோனியுடன் ஒப்பிடுவது, நட்சத்திர வீரர்களை மிகப்பெரிய அளவில் அவமதிப்பதாகும் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுர்ஜேவாலா கூறுகையில் ''இந்த ஒப்பீடு மிகப்பெரிய வீரருக்கு மிகமிகப்பெரிய அவதிப்பாகும். சவுகான், பரிசோதனை அடிப்படையில் கூட ஒருவருக்கும் வாய்ப்பு வழங்காதவர். எப்போதெல்லாம் அவர் பேட்டிங் பிடிப்பாரோ?- அப்போதெல்லாம் அவராகவே ஹிட் விக்கெட் ஆவார். இங்கே மத்திய பிரதேச அரசு ஹிட் விக்கெட் ஆகிறது'' என்றார்.

    மேலும், இந்தியா பெயர் பாரத் என மாற்றப்பட இருப்பதாக வரும் செய்தி குறித்து கேட்டதற்கு ''பா.ஜனதா வேலைவாய்ப்பின்மை, விவசாயம், வறட்சி, இழப்பீடு, பணவீக்கம், வெறுப்பு, வளர்ச்சி போன்றவற்றை பற்றி ஒருபோதும் பேசியது கிடையாது. இதுபோன்ற வலை (சதி), பிரசாரத்தில் மக்களை மத்திய அரசு சிக்க வைக்கும். இது சகுனி வலை போன்றது.'' என்றார்.

    • பா.ஜ.க.வுக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் நான்தான் கொரோனா வைரஸ் என்றார் திக்விஜய் சிங்.
    • கொரோனா வைரசை விட மாநிலத்துக்கு அதிக சேதத்தை காங்கிரஸ் ஏற்படுத்தியுள்ளது.

    போபால்:

    மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங், காங்கிரசின் கொரோனா வைரஸ் என மத்திய பிரதேச நீர்வளத்துறை மந்திரி துளசிராம் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த திக்விஜய் சிங், பா.ஜ.க.வுக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் நான்தான் கொரோனா வைரஸ் என தெரிவித்தார்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்களின் கருத்தை மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக சாடியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், அவர் (திக்விஜய் சிங்) ஒரு சரியான ஒப்பீடு செய்துள்ளார். ஒப்பிடுவதற்கு அவர் வேறு எந்த வைரசையும் கண்டுபிடிக்கவில்லை. கொரோனா வைரசை மட்டுமே கண்டுபிடித்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்களான திக்விஜய் சிங் மற்றும் கமல்நாத் இருவரும் கொரோனா வைரஸை விட மாநிலத்துக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர் என தெரிவித்தார்.

    • மத்திய பிரதேச முதல் மந்திரி சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
    • விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணம் என தெரிய வந்தது.

    போபால்:

    மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இன்று மனாவர் பகுதியில் இருந்து தர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனியார் ஹெலிகாப்டரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

    இந்நிலையில், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிவராஜ் சிங் சவுகான் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அதன்பின், சிவராஜ் சிங் சவுகான் சாலை மார்க்கமாக புறப்பட்டுச் சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

    மத்தியப்பிரதேச முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் தேசிய அளவில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரர் பிழைப்புக்காக வீதியில் பிச்சை எடுத்து வருகிறார்.
    போபால் :

    மத்தியப்பிரதேச மாநிலம், நரசிங்ப்பூரை சேர்ந்தவர் மன்மோகன் சிங் லோதி, மாற்றுத்திறனாளியான இவர் தேசிய அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை குவித்துள்ளார்.

    தேசிய அளவில் தடகள போட்டிகளில் வெற்றி பெற்றதால் மன்மோகன் சிங் லோதிக்கு உதவித்தொகை மற்றும் அரசு வேலை வழங்கப்படும் என மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பு வெளியிட்டார்.

    எனினும், முதல்வர் அறிவித்தபடி  உதவித்தொகையும், வேலையும் லோதிக்கு வழங்காததால் வறுமை காரணமாக அவர் வீதியில் பிச்சை எடுக்க தொடங்கியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து மன்மோகன் சிங் லோதி கூறுகையில், ‘ நான் முதல்வரை நான்கு முறை சந்தித்து அவர் கொடுத்த வாக்குறுதிகள் பற்றி நினைவூட்டினேன். இருந்தாலும் அவை ஏதும் அரசு தரப்பில் நிறைவேற்றவில்லை. நான் வறுமையில் இருப்பதால் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளவும் குடும்பத்தை காப்பாற்றவும் போதிய பண வசதி இல்லை.



    ஏற்கெனவே முதல்வர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதபட்சத்தில் வயிற்று பிழைப்புக்காக தொடர்ந்து வீதியில் பிச்சை எடுக்க முடிவு செய்துள்ளேன்’ என அவர் தெரிவித்தார்.
    மத்திய பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரிகள் அரசு பங்களாவில் தொடர்ந்து குடியிருக்க தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ம.பி முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அனுமதி அளித்துள்ளார். #ShivrajSinghChouhan
    போபால் :

    உத்தரப்பிரதேசத்தில் கடந்த சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் போது முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களா உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை கடந்த 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து அரசு பதவிகளில் இல்லாதவர்கள் தாங்கள் வசித்து வரும் வீடுகளை உடனடியாக காலி செய்தாக வேண்டும் என உத்தரவிட்டது.

    இதையடுத்து, உத்தரப்பிரதேசம் முன்னாள் முதல்-மந்திரிகளான அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ், மாயாவதி ஆகியோர் தங்களது அரசு பங்களாவை காலி செய்தனர்.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மேற்கோள் காட்டி மத்திய பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரிகளான திக்விஜய் சிங், உமா பாரதி, கைலாஷ் ஜோஷி மற்றும் பாபுலால் கௌர் ஆகியோர் தாங்கள் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. 

    ஆனால், அவர்கள் தொடர்ந்து அரசு பங்களாவில் வசிக்க விரும்புவதாக மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானிடம் தெரிவிக்கவே தன்னுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உமா பாரதி, கைலாஷ் ஜோஷி மற்றும் பாபுலால் கௌர் ஆகியோர் தொடர்ந்து அரசு பங்களாவில் வசிக்க அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

    திக்விஜய் சிங் அரசு பங்களாவில் வசிக்க விரும்புவதாக விருப்பம் ஏதும் தெரிவிக்காத நிலையில் அவர் தொடர்ந்து அரசு பங்களாவில் வசிக்க ஒப்புதல் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    ×